தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கேரளா, மகாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். கேரள ஆளுநரான சதாசிவத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவுப்பெற்றது. இதனையடுத்து அந்த பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சரான ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹிமாச்சல பிரதேசத்தின் ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான்- க்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு பதில் முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவை ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன் 5 ஆண்டு பதவி காலம் நிறைவு பெற்றது. இதன் காரணமாக அம்மாநிலத்தின் புதிய ஆளுநராக பகத்சிங் கோஸ்யாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா ஆளுநரான ஈ.எஸ்.எல்.நரசிம்மனின் பதவிக்காலமும் நிறைவு பெற உள்ளதால், அந்த பதவிக்கு யாரும் எதிர்பாராத விதமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

2014ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜகவின் தலைவராக இருப்பவர் தமிழிசை சௌந்தரராஜன். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகளான தமிழிசை சௌந்தரராஜன், பாஜக வின் பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்தவர்.

2006 மற்றும் 20011ம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல், 2009 மற்றும் இந்த ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராக பதவி ஏற்க உள்ளதால், அடுத்ததாக தமிழக பாஜக விற்கு தலைமை ஏற்க போவது யார்?? என்ற கேள்வி எழுந்துள்ளது.

3 thoughts on “தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநர் தமிழிசை…!

  • Akkkaaaaaaaaaaaa

    Reply
  • super kka

    Reply

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே