தென்னாப்பிரிக்கா vs இந்தியா டி20 கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மொகாலியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் குவிண்டன் டி-காக் 52 ரன்களும், பவுமா 49 ரன்களும் சேர்த்தனர்.

20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிகர் தவான் 40 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் கேப்டன் கோலி அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தார்.

19 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் சேர்த்த கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே