சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர்..!!

நல்ல அறிவுரையை யார் சொன்னாலும் ஏற்கவேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் சச்சின் டெண்டுல்கர் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.   

2001-ம் ஆண்டு சென்னை டெஸ்ட் தொடரின்போது தாஜ் கோரமண்டல் ஓட்டலில் தங்கியிருந்தபோது சர்வர் ஒருவர் கூறிய ஆலோசனை தன் ஆட்டத்தை மெருகேற்ற உதவியதாக கூறியுள்ளார்.

முழங்கையை பாதுகாக்கும் ARM GUARD டிசைனில் தவறு இருந்ததை முன்பே உணர்ந்திருந்ததாகவும்; அதுவரை யாரிடமும் அது பற்றி விவாதிக்காத நிலையில் சர்வர் கூறிய ஆலோசனையால் வியப்புற்று, அதை சரி செய்ததாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே