இந்தியா- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் இன்று நடக்கிறது.
தென் ஆப்பிரிக்க அணி மூன்று 20 ஒவர் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க அணியினர் கடைசியாக விளையாடிய நான்கு 20ஒவர் போட்டியிலும் வெற்றி பெற்று மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.
அதுபோல இந்தியாவும் சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து 20ஒவர், ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அபார வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியில் தென்ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி விட முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்திய கிரிக்கெட் அணியினர் களம் இறங்க உள்ளனர்.