தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காவல் நிலையத்தில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதாக ஒருவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கடந்த அக்டோபர் 17ஆம் தேதி அஜித்குமார் என்பவர் மது அருந்திவிட்டு காவலர்களை பணி செய்ய விடாமல் மிரட்டியதாகவும், ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக உதவி ஆய்வாளர் உள்பட 4 பேர் அளித்த புகாரில் அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தர் ராஜ் உத்தரவிட்டார்.