தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி,திண்டுக்கல் கன்னியாக்குமரி,சேலம்,மதுரை,திருச்சி ,கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,திருப்பூர், திருப்பத்தூர், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை; மற்ற வட மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,நாளையும் ,நாளை மறுநாளும் தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,வருகின்ற 20 ஆம் தேதி முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த வரையில் ,மன்னார் வளைகுடா குமரிக்கடல்,மற்றும் தென் கேரளா கடல் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.