தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 7 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 7 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி சரக டிஐஜி அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவில்,

  • தூத்துக்குடி வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் பார்த்திபன் முறப்பநாடு காவல்நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
  • தூத்துக்குடி தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் ஜீன்குமார், ஆழ்வார்திருநகரி சர்க்கிளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
  • தூத்துக்குடி தெற்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தெற்கு காவல்நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தூத்துக்குடி வடக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் தெர்மல்நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
  • அங்கிருந்த காவல் ஆய்வாளர் ரஞ்சித்குமார் திருச்செந்தூர் கோவில் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
  • திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல்நிலைய ஆய்வாளர் எஸ்.அருள், தூத்துக்குடி வடக்கு காவல்நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல்நிலைய ஆய்வாளர் அசோகன், அதே மாவட்டத்தில் பனவடலிசத்திரம் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்எஸ்ஐ, தலைமைக் காவலர்கள், காவலர்கள் என 40 பேர் அதே மாவட்டத்திற்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலைச் சம்பவங்கள் எதிரொலியாக, இந்த பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே