தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் கின்னஸ் சாதனைக்கு தேர்வு

மலேசியாவில் நடந்த சிலம்ப போட்டியில் உலகளவில் மூன்றாம் இடம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் கின்னஸ் சாதனைக்கு தேர்வாகியுள்ளனர்.

மலேசிய சிலம்ப அகாடமி மற்றும் ஆசிய சிலம்ப அகாடமி சார்பில் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் உலக சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இந்தியா, மலேசியா ,சிங்கப்பூர் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்தோர் இதில் பங்கேற்ற நிலையில், நாகை மாவட்டம் சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தை சேர்ந்த 16 வீரர்கள் உள்பட தமிழகத்திலிருந்து 300 வீரர்கள் பங்கேற்றனர்.

அந்த வகையில், சுருள்வாள், தொடுசிலம்பம் , ஒற்றைக்கம்பு ,இரட்டை கம்பு, வாள் கேடயம் , தீப்பந்தம் சுற்றுதல் உள்ளிட்ட பிரிவில் கலந்துகொண்டு 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கங்களை வென்றனர். மேலும், 5 நிமிடம் தீப்பந்தம் சுற்றும் பிரிவில் உலகளவில் 300 பேர் பங்கேற்றனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த 80 பேர் பங்கேற்ற நிலையில் அவர்கள், கின்னஸ் சாதனைக்கு தேர்வாகியுள்ளனர்.

போட்டியில், வெற்றிபெற்று திரும்பிய சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தை சேர்ந்த வீரர்களுக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே