திமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் குறித்து துரைமுருகன் அறிக்கை

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறிய, திமுக பொருளாளர் துரைமுருகன்,  அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகளில் ஒன்றையாவது காட்ட முடியுமா?? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர், வீணாகக் கடலில் கலக்கிறது எனக் குற்றம் சாட்டினார்.

மாயனூரில் காவிரியின் குறுக்கே தடுப்பணையை திமுக ஆட்சியில் கட்டப்பட்டதாகவும், இதன் காரணமாக அந்தப் பகுதியில் விவசாயம் செழித்துள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அந்த காலகட்டத்திற்கு ஏற்ப மாயனூரில் தடுப்பணை கட்டப்பட்டதாகக் கூறியுள்ள அவர், தேவை இருந்திருந்தால் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு மேலும் தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக ஆட்சியில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளாக குறிப்பிட்டுள்ள அவர், அதிமுக ஆட்சியில் இன்னின்ன இடங்களில்  தடுப்பணை கட்டி வருகிறோம் அல்லது கட்டத் திட்டமிட்டுள்ளோம் என, ஆதாரங்களுடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே