பிரதமர் மோடியால் கூட மக்கள் கிராம சபை கூட்டத்தை தடுக்க முடியாது – மு.க.ஸ்டாலின்

மரக்காணம் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் , குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சில அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் மக்களை குழப்புவதற்காக அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன.

கிராம சபையினை கூட்டும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு மட்டுமே உள்ளது. கிராம சபை கூட்டுவதற்கு அரசால் அனுமதிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரை பயன்படுத்தி இது போன்ற அரசியல், பொதுக்கூட்டம் கூட்டினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆகவே கிராம சபை என்ற பெயரில்தானே கூட்டம் நடத்தக் கூடாது ? இனி மக்கள் கிராம சபை என்ற பெயரில் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி இன்று மரக்காணம் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்பொழுது அவர் பேசுகையில்,பிரதமர் மோடியே வந்தாலும் மக்கள் கிராம சபைக்கூட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது.

குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன்.நேரடியாக அரசியலுக்கு வர வில்லை.

சிறு வயதிலிருந்து கட்சி உணர்வோடு , கட்சி வழியாக பதவிக்கு வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே