தேவர் மகன் பட வசனத்தை கூறி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் விட்டுள்ளார்.
விருது நகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பேரறிஞர் அண்ணாவின் 111 ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜெயலலிதாவை சிறையில் அடைக்க காரணமாக இருந்த ப.சிதம்பரம் தோண்டிய படுகுழியில் அவரே விழுந்து விட்டதாக தெரிவித்தார்.
அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் மாதம் கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நாங்குநேரி, விக்கிரமாண்டி இடைத்தேர்தலில் திமுக வா… வா…, மல்லுக்கு வா…, சண்டைக்கு வா…, மோதிப் போர்ப்போம் என்று தேவர் மகன் பட வசனத்தை கூறி திமுகவுக்கு சவால் விடுத்தார்.