தாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்

தாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஹிந்தி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்து குறித்து அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எங்கள் தாய்மொழி மீது கை வைக்காதவரை அவர்களது கருத்துக்கள் ஏற்கப்படும் என்றார்.

தாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்கப்படாது என்றும், விபத்தின் மூலம் கிடைத்த மொழி ஆங்கிலமாக இருந்தாலும் அது நன்மையாக அமைந்தது என்று கூறிய அவர், அடிமையாக இருந்த போதிலும் ஆங்கிலத்தை வைத்து நாம் வேறு கருவி செய்து கொண்டோம் என்று தெரிவித்தார்.

பேனர் குறித்து நடிகர் விஜய் பேசியது பற்றி கருத்து தெரிவித்த கமல், சரியான நேரத்தில் நியாயத்திற்காக குரல் கொடுத்த விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே