தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வங்கக்கடலின் வடக்கு பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மழை நீடிக்கும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே