தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழக அரசு மத்திய அரசோடு இணைந்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெற்றுக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டுகள் தொடங்கப்படுள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழகத்தில் டெங்கு பாதிப்பற்ற சூழலை அரசு உறுதிப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சிறப்பான வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே