தமிழில் ட்விட் செய்த அமித் ஷா..!!

தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் தமிழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பிற்பகலில் சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அமித் ஷாவை, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த உள்துறை அமைச்சருக்கு பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் இணைந்து வரவேற்பளித்தனர்.

சென்னை விமான நிலையத்திலிருந்து நட்சத்திர விடுதிக்கு காரில் சென்று கொண்டிருந்த அமித் ஷா, சாலையின் இருபக்கமும் நின்றிருந்த தொண்டர்களைப் பார்த்ததும், காரிலிருந்து இறங்கி, சாலையில் நடந்தபடி, தன்னை வரவேற்க நின்றிருந்தவர்களுக்கு கைகளை அசைத்தும், வணக்கம் தெரிவித்தும் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

பிறகு காரில் ஏறி சென்னையிலுள்ள நட்சத்திர விடுதிக்குச் சென்றார்.

இந்த நிலையில், அவரது சுட்டுரைப் பக்கத்தில் சென்னை வருகை தொடர்பான புகைப்படங்கள் பதிவிடப்பட்டு, சென்னை வந்தடைந்தேன்!

தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர, சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே