தமிழகத்திலும் ஓணம் பண்டிகை கோலாகலம்

கேரளாவின் பிரசித்திபெற்ற ஓணம் பண்டிகை தமிழகத்திலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வரும் 11ஆம் தேதி அந்த பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகை தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து 10 வகையான பூக்களைக் கொண்டு பிரமாண்ட அத்தப்பூ கோலமிட்டும், கைகொட்டியும், நடனமாடியும் மகிழ்ந்தனர்.

அதேபோல் மகாபலி மன்னனை வரவேற்று பாடும் கைகொட்டுகளி நடனத்தையும் பெண்கள் இணைந்து ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நாகர்கோவிலில் உள்ள பள்ளிக்கூடத்தில் மாணவியர்கள் வித விதமான அத்தப்பூ கோலங்கள் போட்டும், திருவாதிரை நடனங்கள் ஆடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் கூறி ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினார்கள்.

அதேபோல் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை களை கட்டி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே