தண்ணீரின்றி கருகும் பருத்திச் செடிகள் – விவசாயிகள் வேதனை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருவதால் விவசாயிகள் ஆழ்ந்த வேதனையில் உள்ளனர்.

சாத்தான்குளம் பேய்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் வாழை மற்றும் பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் போதிய மழை பெய்யாமல் கிணறுகள் வறண்டு பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்ட பருத்தி செடிகள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தண்ணீரின்றி கருகும் பருத்தி சாகுபடி செய்த நிலங்களில் கால்நடைகளை மேய விடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே