தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.664 குறைந்தது

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 664 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த ஒரு மாத காலமாகவே கடுமையாக உயர்ந்து வந்த தங்கம் விலை பல்வேறு புதிய உச்சங்களையும் எட்டி விற்பனையானது. கடந்த புதன்கிழமை சவரன் 30 ஆயிரம் ரூபாயை கடந்தது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில் தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு 328 ரூபாய் குறைந்தது. தொடர்ந்து பிற்பகலில் தங்கம் விலை சவரனுக்கு மேலும் 336 ரூபாய் குறைந்தது. மொத்தமாக ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் 664 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி காலையில் 29 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத்தங்கம், பிற்பகலில் மேலும் குறைந்து 29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத்தங்கம் மொத்தமாக 83 ரூபாய் குறைந்து மூவாயிரத்து 658 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் ஒரே நாளில் கிராமுக்கு 3 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 51 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 3 ஆயிரத்து 500 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே