டெங்கு – அச்சம் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம்

டெங்கு காய்ச்சல் குறித்து யாரும் அச்சப் படவும்வேண்டாம், அதேசமயம் அலட்சியமாகவும் இருக்க வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் கோனேரிக்குப்பம் கிராமத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சங்கரா பல்நோக்கு மருத்துவமனையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திறந்து வைத்தார்.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அண்டை மாநிலமான தெலுங்கானாவில் 10 ஆயிரம் பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இங்கு குறைந்த அளவிலேயே டெங்கு பாதிப்பு உள்ளது என்றார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே