ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டோர்செய்யின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு உள்ளது.
இதில் இனவெறியை தூண்டும் வகையிலான பதிவுகள் உட்பட ஏராளமான பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக நீக்குவதற்கு ட்விட்டர் தொழில்நுட்ப அதிகாரிகள் போராடி வருகின்றன. ஜாக்கையே பாதுக்காக்க முடியாது என்றால் யாரையும் பாதுகாக்க முடியாது என்றும் ட்விட் செய்யப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு நடவடிக்கையாக போலியான ட்விட்டர் கணக்குகளை சுத்தம் செய்வதற்காக ட்விட்டர் நிர்வாகம் அண்மையில் ஏராளமான கணக்குகளை நீக்கியுள்ளது.

கால்பந்து வீரர்களுக்கு எதிரான பதிவான இன ரீதியான அவதூறுகள், அரசியல் காழ்ப்புகளுடன் வெளியான பதிவுகளும் நீக்கப்பட்டன. இதன் எதிரொலியாகவே ட்விட்டர் சிஇஓ-வின் கணக்கு ஹாக்கிங் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.