ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மகளுக்கு தொந்தரவு… காவல்நிலையத்தில் புகார்

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மகளின் செல்போன் நம்பருக்கு ஆபாச அழைப்புகள் தொடர்பான புகாரின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மகள் ரூபையா ஷெரீப் (45). இவர் திருமணமாகி சென்னை ஆர்.ஏ புரம் கேசவபுரத்தில் குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார்.

இவரின் கணவர் வேளச்சேரியில் கார் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ரூபையா ஷெரிப்பின் செல்போன் எண்ணுக்கு மூன்று தொலைப்பேசி எண்களில் இருந்து தொடர்ந்து ஆபாச அழைப்புகள் வந்துள்ளது.

இது குறித்து சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ரூபையா. 

அதன் பேரில் காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் கூறுகையில், “ரூபையா ஷெரிப் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் அவரின் செல்போன் நம்பருக்கு 2 செல்போன் நம்பர்களிலிருந்தும் ஒரு லேண்ட் லைன் நம்பரிலிருந்தும் அழைப்பு வந்துள்ளது.

அந்த நம்பர்கள் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை நாடியுள்ளோம். ஆபாசமாக பேசியவர்கள் குறித்த தகவல் கிடைத்ததும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே