ஜம்மு காஷ்மீர் சமூக ஆர்வலர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு

சமூக ஊடகங்களில் ஜம்மு காஷ்மீர் குறித்த பதிவுகளை வெளியிட்ட ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஷெலா ரஷீத் என்ற பெண் சமூக ஆர்வலர் மீது டெல்லி தீவிரவாதத் தடுப்பு காவல்துறை அலுவலகத்தில் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.காஷ்மீர் மக்களை ராணுவம் சித்ரவதை செய்வதாக ஷெலா ரஷீத் வெளியிட்ட பதிவுக்கு ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே