சென்னையை துபாய் போல் மாற்றுவோம் : முதல்வர் பழனிசாமி

எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை உடைக்க முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அவர் தமிழகத்தை மாசில்லா மாநிலமாக உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

“சென்னையை துபாய் போன்ற பிரமாண்ட நகரமாக உருவாக்குவோம்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏக்கர் ஒன்றுக்கு பயன்படுத்தும் நீரை இஸ்ரேல் நாட்டில் ஏழு ஏக்கருக்கு பயன்படுத்துவதாகவும், இதனை அறியவும், நீர் மேலாண்மை குறித்து ஆராயவுமே இஸ்ரேல் செல்வதாக விளக்கமளித்தார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்வதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வது மர்மம் என்ன?? என்று கேள்வி எழுப்பினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே