சென்னையில் 2,300 விநாயகர் சிலைகள் இன்று கரைப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.

பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் நகரில் 2600 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு இருந்தன. கடந்த 5-ஆம் தேதியும் நேற்றும் சிலைகள் கடலில் கரைக்கப்பட்ட நிலையில் சுமார் 2300 விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைக்கப்பட உள்ளன.

பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, எண்ணூர் ஆகிய இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதைகளிலும், சிலைகள் கரைக்கும் இடங்களிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

அனுமதிக்கப்பட்ட வழியில் தான் ஊர்வலம் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்தை ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே