சென்னையில் வேளாங்கண்ணி ஆலய கொடியேற்ற திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது

சென்னை பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலய கொடியேற்ற திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

காலை முதலே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர். மாலையில் மேலும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்பதால் கழிப்பிட மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சம்பவங்களை தடுக்க பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இன்று தொடங்கி அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன. இறுதி நாளில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே