சென்னை குடிநீருக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆயிரம் கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.
தென்மேற்குப் பருவமழை பெய்ததால் கிருஷ்ணா ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், தமிழக அமைச்சர்கள், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனை சந்தித்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, நெல்லூர் மாவட்டம், கண்டலேறு அணையிலிருந்து நேற்று ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
படிப்படியாக 2 ஆயிரம் கனஅடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்படும் என்றும், ஒரே மாதத்திற்குள் 2 டிஎம்.சி வழங்கப்படும் எனவும் ஆந்திர மாநில முதன்மை பொறியாளர் முரளிநாத் ரெட்டி தெரிவித்தார்.
சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து, சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படும் என்று அவர் மேலும் கூறினார்.