சிறார்களின் தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி பயன்படுத்திய குற்றச்சாட்டு

சிறார்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் யூடியூப் நிறுவனத்திற்கு 200 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

யூடியூப் பயன்படுத்தும் 13 வயதுக்கு உட்பட்ட சிறார்களின் டேட்டாக்களை அவர்களது பெற்றோரின் அனுமதியின்றி யூடியூப் பயன்படுத்திக் கொள்வதாக அமெரிக்காவைச் சேர்ந்த உரிமை பாதுகாப்பு அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளனர். அந்த டேட்டாக்கள் மூலம் சிறார்களை குறிவைத்து யூடியூபில் விளம்பரங்கள் வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரித்து அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம் விதிகளை மீறியதற்காக யூடியூபில் உரிமையாளரான கூகுள் நிறுவனத்திற்கு 150 மில்லியன் டாலர் முதல் 200 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 1500 கோடி ரூபாயாக ஆகும்.

இதற்கு அந்நாட்டு நீதித்துறை ஒப்புதல் வழங்கினால் சிறார்களின் அந்தரங்கம் பேணும் உரிமை தொடர்பாக விதிக்கப்பட்ட அபராதத் தொகையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தொகை கூகுள் நிறுவனத்தில் பணத்தை ஒப்பிடும்போது மிகவும் குறைவு தான் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே