சிக்கலில் சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம்..!!!

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் திட்டமிட்டபடி அக்டோபர் 2-இல் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்ன காரணம்?? என்பதை இந்த செய்தி தொகுப்பு விளக்குகிறது.

சைரா, இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம். ஆந்திர மாநிலத்தின் ராயலசீமா பகுதியில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரரான ஒய்யாலவால நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம்.

இந்தப் படத்தின் முன்னோட்ட காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி, “ராஜபாண்டி” என்ற தமிழ் மன்னரின் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். வரும் இரண்டாம் தேதி இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த படம் வெளியாவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டது. படத்தை எடுப்பதற்காக நரசிம்மரின் வாரிசுதாரர்களுக்கு படத்தின் தயாரிப்பாளரும், சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் 50 கோடி ரூபாய் பணம் தருவதாக ஒப்புதல் தந்து இருந்ததாகவும், ஆனால் இதுவரை அந்த பணத்தை ராம்சரண் தரப்பு வழங்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாகவும், நரசிம்மராவின் வாரிசு தாரர்கள் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து திட்டமிட்டபடி சைரா நரசிம்ம ரெட்டி படம், அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வருமா?? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே