சாதிய, வகுப்புவாதத்தைப் பரப்பும் வகையில் கேள்வித்தாள் வெளியான விவகாரம்

தலித் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் உலா வரும் வினாத்தாள் போலி என்று CBSE விளக்கம் அளித்துள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் 6-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான கேள்வித்தாள்களில் சாதி பாகுபாட்டையும், வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் இடம் பெற்று இருந்ததாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்தத் தகவலில் உண்மை இல்லை என்று கேந்திரிய வித்யாலயா மற்றும் CBSE சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், எந்த ஒரு பள்ளியிலும் இதுபோன்ற கேள்வித்தாள் உருவாக்கப்படவில்லை என்று கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் சென்னை மண்டல இணை ஆணையர் மாணிக்கசாமி தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவிவரும் வினாத்தாள் வடிவமைப்பு CBSE பள்ளிகளையோ, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையோ சார்ந்தது அல்ல என்றும், 6-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் என்று உலா வரும் தகவலும் போலி என்றும் CBSE விளக்கம் அளித்துள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே