சந்திராயன் -2 குறித்த அமுல் நிறுவனத்தின் ட்விட்டர் பதிவுக்கு குவியும் பாராட்டுகள்

பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் சிவனை கட்டியணைத்து ஆறுதல் கூறிய நிகழ்வை சித்திரிக்கும் அமுல் நிறுவனத்தின் கார்ட்டூன் பதிவு பல்வேறு தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

விக்ரம் லேண்டர் தரை இறங்கும் நிகழ்வை பார்வையிட இஸ்ரோ மையத்துக்கு வந்திருந்த பிரதமர் மோடி, கண் கலங்கிய இஸ்ரோ தலைவர் சிவனை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

பிரதமர் மோடியின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்ததோடு பல்வேறு தரப்பினரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆதரவாகவும், வாழ்த்து தெரிவித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமுல் நிறுவனமும் சந்திராயன் -2 திட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தது. அமுல் நிறுவனத்தின் தனித்துவமான கார்ட்டூன் உருவத்தில், பிரதமர் மோடி இஸ்ரோ தலைவரை தேற்றுவதை சித்தரிக்கும் வகையிலான படமும், அதனோடு சந்திராயன் -2 இன்னும் உயிருடன் இருப்பதாகவும், திட்டம் விரைவில் முழுமையடையும் என்ற வாசகமும் பதிவிடப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே