கோடிக்கணக்கான மக்களை வறுமைக் கோட்டில் இருந்து மீட்டவர் மோடி

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், மோடியின் தேர்தல் வெற்றியைக் குறிப்பிட்டு இந்திய மக்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்த தலைவர் மோடிதான் என்று பாராட்டு தெரிவித்தார்.

மோடி இந்தியாவை வறுமைக்கோட்டில் இருந்து உயர்த்துவதற்காக பல்வேறு நலப்பணிகளை ஆற்றி வருவதாகவும் அவர் புகழாரம் சூடினார்.

தீவிரவாதத்தை இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து எதிர்க்கும் என்றும் டிரம்ப் உறுதிபடத்தெரிவித்தார்.

இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் அப்பாவி மக்களை பாதுகாக்க எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

அக்டோபர் மாதம் மும்பையில் நடைபெற உள்ள என்பிஏ கால்பந்தாட்டத்தை காண தாம் இந்தியா வரக்கூடும் என்றும் அப்போது டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் வளர்ச்சிக்காக பாடுபடும் இந்தியர்களுக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே