கூட்டுறவு வங்கியில் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி

இராமநாதபுரம் அருகே கூட்டுறவு வங்கியின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை சிசிடிவி மூலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

திருப்பாலைக்குடியில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் ஷட்டர் மற்றும் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் மற்றும் போலீசாரும், வங்கி அதிகாரிகளும் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இதில் வங்கிக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் நகை, பணம் இருந்த லாக்கரை உடைக்க முயன்று உள்ளதும், அது முடியாததால், ஏமாற்றத்துடன் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் லாக்கரில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது. மர்ம நபர்கள் பற்றி தடயவியல் நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றன. மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி பதிவை வைத்து விசாரித்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே