பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை ரிசர்வ்வங்கி தளர்த்தியுள்ளது.
அந்த வங்கியின் நிதி நிலையை மேம்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்றும் 60 சதவீத வாடிக்கையாளர்கள் முழுப்பணத்தையும் எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதையடுத்து பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மும்பையில் உள்ள வங்கிகளின் கிளைகளிலும் ஏடிஎம் மையங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்து சென்றனர்.
இதனிடையே வங்கி ஊழியர்கள் வங்கி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிறுவனத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.