இந்தியா வந்தடைந்தார் அதிபர் ட்ரம்ப் – பிரம்மாண்ட வரவேற்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசு முறை பயணமாக தனது மனைவியுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தடைந்தார்.

தனது பிரத்யேக விமானத்தில் வந்தடைந்த அவரை, பிரதமர் மோடி, நேரில் சென்று வரவேற்றார்.

முப்படை வீரர்கள் அணிவகுப்பு, கண்கவர் கலை நிகழ்ச்சிகள் என டிரம்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரத்யேக கார் மூலம் டிரம்ப் அவரது மனைவி, பிரதமர் மோடி ஆகியோர் சமர்பதி ஆசிரமம் செல்ல உள்ளனர். பின்னர், மோதேரா மைதானத்தில் அவர் மக்களிடையே உரையாற்றுகிறார்.

பின்னர், டெல்லி திரும்பும் அவர் நாளை தாஜ்மஹாலுக்கு சென்று பார்வையிட உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே