குடுக்கு பாடலுக்கு நடனமாடிய டெல்லி பாதிரியார்…

மலையாளத்தில் பிரபலமாகி வரும் குடுக்கு பாடலுக்கு பாதிரியார் ஒருவர் நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில் வெளியான லவ் ஆக்சன் டிராமா படத்தில் இடம்பெற்ற குடுக்கு பாடலின் டீசர் இதுவரை 67 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

ஓணத்தை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த பாடல் கலை நிகழ்ச்சிகளின் போது ஒலிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் மேத்யூ என்ற பாதிரியார் இளைஞர்கள் இருவருடன் இந்த பாடலுக்கு நடனமாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

அதற்கு நிவின் பாலியும் நன்றி தெரிவித்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தான் பிரபலமாவேன் என நினைக்கவில்லை என்றும், தான் ஆடியதை வீடியோ படம் பிடித்ததைக் கூட தான் கவனிக்காத நிலையில் பலரும் தன்னை அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதாக பாதிரியார் மேத்யூ தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே