கிரிக்கெட் வீரர்களின் முறைகேடுகளைத் தவிர்க்க புதிய நடவடிக்கைகள் – பிசிசிஐ

கிரிக்கெட் வீரர்கள் ஊக்க மருந்துகளை உட்கொள்வது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற குற்ற செயல்கள் குறித்த விழிப்புணர்வை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கி உள்ளது.

அனைத்து உறுப்பினர்களும் கிரிக்கெட் சங்கங்களும் போதைப் பொருள் குறித்த புகார்களை அணுகவும், வீரர்கள் வயதை மாற்றி தெரிவித்து மோசடி செய்த புகார்களை தெரிவிக்கவும் தனிக் குழுவொன்றையும் பிசிசிஐ அமைத்துள்ளது.

இதற்கான ஹெல்ப் லைன் எண்களும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த எண்கள் இந்தியா முழுவதும் உள்ள பிசிசிஐ அலுவலகங்கள், கிரிக்கெட் மைதானங்கள் போன்றவற்றில் காட்சிக்கு வைக்கப்படும்.

போதைப் பொருள், ஊக்கமருந்து , முறைகேடு ஆகியவற்றில் இருந்து 2019-20 சீசன் கிரிக்கெட் போட்டிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே