“காலி பிளாஸ்டிக் பாட்டில் வழங்கினால் ரூ.5 பரிசு” : நீலகிரி மாவட்ட ஆட்சியர்

காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வழங்கினால் 5 ரூபாய் பரிசு வழங்கும் புதிய திட்டத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதகை நகராட்சிக்கு உட்பட்ட ஐந்து இடங்களில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்துக்குள் பிளாஸ்டிக் பாட்டில்களை போடும்போது, சிறு துகள்களாக மாற்றப்பட்டு ஏரிக்கப்படுகிறது.

PAYTM வாடிக்கையாளர்கள் இந்த இயந்திரத்துக்குள் பிளாஸ்டிக் பாட்டில்களை செலுத்திவிட்டு, தங்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதனை அடுத்து அவர்களுக்கு ஐந்து ரூபாய்-கான கேஷ்பாக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே