கமல்ஹாசன் இந்தி திணிப்புக்கு எதிராக ட்விட்டரில் வீடியோ

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இந்தி திணிப்புக்கு எதிராக ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா எனக் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், ஆனால் விட்டுக் கொடுக்க முடியாது என பல மாநிலங்களும், பல இந்தியர்களும் சொன்ன விஷயம் தங்களது மொழியும் கலாச்சாரமும் தான் எனக் கூறியுள்ளார்.

வங்காளிகளை தவிர, பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை தங்கள் தாய் மொழிகளில் பாடுவதில்லை என்ற போதிலும், அனைத்து தரப்பினரும் அதனை சந்தோஷமாக பாடிக்கொண்டிருப்பதாகவும் கமல் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் எச்சரிக்கை வீடியோ

தேசிய கீதத்தை எழுதிய கவிஞர், அனைத்து கலாச்சாரம் மற்றும் மொழிகளுக்கு தேவையான இடத்தையும், மதிப்பையும் தேசிய கீதத்தில் கொடுத்திருந்ததே அதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து எனவும், அதனை கூடி உண்போம், திணிக்க நினைத்தால் குமட்டிவிடும் எனவும் அந்த வீடியோவில் கமல் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே