விழுப்புரம் அருகே சிறு மதுரையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்ற தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதோடு,ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுமி கொலை சம்பவத்தை மனிதாபிமானம் உள்ள எவரும் ஏற்க மாட்டார்கள்.
சம்பந்தபட்ட குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும்.
பெண்கள் மீதான வன்கொடுமை ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு ஒடுக்க வேண்டும்.
கருணா நோய் தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பொது முடக்க முடியும் முறை டாஸ்மாக் மதுக்கடைகளை அரசு திறக்கக்கூடாது.
தொழில்துறை முன்னேற்றத்துக்கு மத்திய அரசு வழங்க உள்ள ரூ.20 லட்சம் கோடியை, இளைஞர்கள் பயன்படுத்தி தொழில் முனைவோராக முன்னேற வேண்டும் என்றார்.
தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.