காந்தியடிகளின் பிறந்த நாளிலாவது நியாயம் கிடைக்கட்டும் – அற்புதம்மாள் வேதனை ட்விட்

எந்த ஒரு நிரபராதியும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்று சொன்ன காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாளிலாவது, பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு நியாயம் கிடைக்கட்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக அரசும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியது.

ஏழு பேரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு, ஓராண்டுக்கு மேலாகிறது. இவ்விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதால், அவர் விரைவில் தனது முடிவை அறிவிப்பார் என்று தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எந்த ஒரு நிரபராதியும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்று சொன்ன காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாளிலாவது, பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு நியாயம் கிடைக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே