கவலைக்கிடமாக சிகிச்சை பெற்ற அமிதாப் பச்சன் 2 மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பினார்

1982-ஆம் ஆண்டு ‘கூலி’ படப்பிடிப்பின் போது விபத்துக்குள்ளாகி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்ற நடிகர் அமிதாப் பச்சன் 2 மாதங்களுக்கு பின் வீடு திரும்பிய போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

புனித் இஸாருடனான சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பின் போது விபத்துக்குள்ளான அமிதாப்பச்சன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

2 மாத மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பிய கருப்பு வெள்ளை வீடியோவை அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் அம்பாசடர் காரில் இருந்து வெளியே வரும் அமிதாப் பச்சன் தனது தந்தை ஹர்ஷவர்தன் ராய் பச்சனிடம் ஆசிபெறுதல் உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தான் விபத்துக்குள்ளானபோதுதான் தனது தந்தையின் கண்களில் நீரைப் பார்த்ததாக அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவரிடம் இருந்து பெற்ற இந்த வீடியோவை அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே