பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு சம்மன்

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான இக்பால் மிர்சியுடன் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா வர்த்தக ரீதியிலான தொடர்பு வைத்திருந்ததாக புகார் எழுந்தது.

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையில் சிக்கியுள்ள ஆர்.கே.யு முன்னாள் இயக்குனர் ரஞ்சித் பிந்த்ரா மற்றும் மற்றொரு இயக்குனரான பாபா தேவன் என்கிற தீரஜ் பாத்வால் ஆகியோருடன் ஷில்பா ஷெட்டி இயக்குனராக இருந்த எஸ்சென்சியல் ஹாஸ்பிடாலிட்டி என்கிற நிறுவனம் தொடர்பில் இருந்திருக்கிறது.

இதுதொடர்பாக நான்காம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறை ராஜ் குந்த்ராவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே