கல்லூரி உதவிப் பேராசிரியை கடத்தல் : அதிமுக பிரமுகருக்கு போலீஸ் வலைவீச்சு

திருச்சியில் காதலிக்க வற்புறுத்தி தனியார் கல்லூரி உதவி பேராசிரியை கடத்திச் சென்ற அதிமுக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.

மலைக்கோட்டை வடக்கு வீதியை சேர்ந்த மஹாலக்ஷ்மி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

மகாலட்சுமியை அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் வணக்கம் சோமு என்பவர் தம்மை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு மகாலட்சுமி மறுப்பு தெரிவித்ததால், வணக்கம் சோமு அவரை ஆம்புலன்ஸ் வேனில் கடத்திச் சென்றுள்ளார்.

இதுகுறித்து மகாலட்சுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் செல்போன் சிக்னல் அடிப்படையில் வணக்கம் சோமுவை போலீசார் விரட்டிச் சென்றனர்.

இதை அறிந்த வணக்கம் சோமு மகாலட்சுமியை வேனில் இருந்து இறக்கி விட்டு தப்பிச்சென்றார். மகாலட்சுமியை மீட்ட போலீசார், வணக்கம் சோமுவை தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே