கரூர் அருகே, தலைக்கவசம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாததுடன் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபருக்கு15 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கந்தம்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தலைக்கவசம் அணியாமல், தான்தோன்றி மலைப்பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற நிலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் கனகராஜை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
சோதனையில், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் தலைக்கவசம் அணியாத கனகராஜ், குடி போதையில் வாகனத்தை ஓட்டி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 10,000 ரூபாய்,
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டியதற்காக 5000 ரூபாய்
மற்றும் தலைக்கவசம் அணியாததற்காக 500 ரூபாய் என
மொத்தம் 15 ஆயிரத்து 500 ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அபராத தொகையை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு தனது வாகனத்தை அவர் மீட்டுச்சென்றுள்ளார்.
கரூர் மாவட்டத்தை பொருத்தவரை இதுபோன்ற வழக்குகளில் அதிகப்படியாக விதிக்கப்பட்ட அபராத தொகை இதுதான் எனவும் கூறப்படுகிறது.