கமல் சம்மதித்தால் ‘தேவர் மகன்-2’வை இயக்கத் தயார் – இயக்குநர் சேரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய அவரை வரவேற்கும் விதமாக “வெல்கம் பேக் சேரன்” நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட சேரன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகர் விஜய் சேதுபதியே காரணம் என்றும், மனிதர்களை புரிந்துகொள்ள அந்த நிகழ்ச்சி பெரிதும் உதவியதாகவும் தெரிவித்தார்.

மேலும், கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்தால் தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்க தயார் எனவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே