கமல்ஹாசன் போன்ற அரசியல் தலைவர் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி கலாசாரத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டிய வேல்முருகன் கூட்டுக் குடும்பங்களை சீரழிக்கும் வகையிலான இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கூடாது என்று வலியுறுத்தினார் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்கிற திட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று கூறிய வேல்முருகன் இது மத்திய அரசின் சர்வாதிகாரம் என்று குற்றம் சாட்டினார் .
- விஜய் ரசிகர்கள் எங்கள் பக்கம் : அதிமுக MLA
- ப.சிதம்பரத்துக்கு திகார் சிறை – சிபிஐ சிறப்பு நீதிமன்றம்