“கொரோனா காதல்”…இணையத்தை கலக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உற்சாக நடனம்…!!!

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பதாகவும், இதனால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளதாகவும் செய்திகள் பரவின. இந்த செய்தி உண்மையில்லை எனக்கூறி இயக்குனர் விக்னேஷ் சிவன் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கொரோனா காதல் என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஆப் மூலம் தங்களை குழந்தைகள் போல் சித்தரித்துள்ள அந்த வீடியோவில், இருவரும் ரைம்ஸ் பாடலுக்கு ஏற்ப கியூட்டாக நடனமாடி உள்ளனர்.

மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளதாவது:-

“எங்களைப் பற்றிய செய்திகளை நாங்கள் இப்படித் தான் பார்க்கின்றோம். கொரோனா மற்றும் நாங்கள் இறந்தது போல் புகைப்படங்களை எடிட் செய்தவர்களையும் அப்படித் தான் பார்க்கிறோம். நாங்கள் உயிரோடு தான் இருக்கின்றோம். சந்தோஷமாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்கிறோம். உங்களைப் போன்ற ஜோக்கர்களின் கற்பனை மற்றும் மட்டமான ஜோக்குகளையும் பார்க்க இறைவன் எங்களுக்கு போதுமான வலிமை மற்றும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறார்” என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே