கணவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சொத்து தகராறில் பெண் ஒருவர் தனது கணவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெற்கு கள்ளிகுளத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், வெளிநாட்டில் டெய்லராக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார். இதனிடையே உடல்நிலை பாதிக்கப்படவே, நாடு திரும்பி, கடந்த சில வருடமாக வேலை எதுவும் செய்யாமல் இருந்தார்.

அவரின் மனைவியின் பெயர் மரியலீலா. இவர்களது 2 மகன்கள், 2 மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது. இந்நிலையில் சொத்துக்களை மகன்களுக்கு எழுதிக் கொடுக்க பாக்கியராஜ் முடிவு செய்தார். இதற்கு மரியலீலா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சொத்தினை தனது பெயருக்கு எழுதித் தரும்படி மரியலீலா நேற்று இரவு தகராறில் ஈடுபட்டுள்ளார். தூங்கிக் கொண்டிருந்த பாக்கியராஜ் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். அப்போது அக்கம்பக்கத்தினர் பாக்கியராஜை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனிற்றி இன்று காலை பாக்கியராஜ் உயிரிழந்தார். இதையடுத்து மரியலீலாவை கைது செய்து வள்ளியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே