ஒர் ஆண்டுக்கு பிறகு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை!

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

தான் அரசியலுக்கு வருவது உறுதி என ஏற்கெனவே நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை மூன்றாவது முறையாக நடிகர் ரஜினிகாந்த் தற்போது சந்திக்க உள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் காலை 10 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில், புதிய அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே