ஒரே நிமிடத்தில் 6 இட்லிகளை உண்ட 60 வயது பெண்ணுக்கு முதல் பரிசு

கர்நாடகாவில் நடந்த இட்லி உண்ணும் போட்டியில், 60 வயது பெண்மணி ஒருவர், ஒரே நிமிடத்தில் 6 இட்லிகளை சாப்பிட்டு அசத்தி, முதல் பரிசை தட்டிச்சென்றார்.

தசராவை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மைசூருவில், பெண்களுக்கான பிரத்தேயக இட்லி உண்ணும் போட்டி நடைபெற்றது.

பந்தல் அமைக்கப்பட்டு, நீண்ட டேபிள் போடப்பட்டு, நடைபெற்ற இப்போட்டியில், வயது வித்தியாசமின்றி ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

இட்லிக்கு சாம்பாரும் பரிமாறப்பட்டது. போட்டிக்கான கால அளவாக ஒரு நிமிடம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பந்தயத்தில் ஜெயிக்கவேண்டும் என்பதற்காக போட்டி போட்டிக்கொண்டு பலரும் வேகவேகமாக இட்லிகளை உள்ளே தள்ளினர்.

அந்த வகையில், 60 வயதான சரோஜம்மா என்பவர் ஒரே நிமிடத்தில் 6 இட்லிகளை சாப்பிட்டு அனைவரையும் வியக்கவைத்தார்.

இட்லி உண்ண இளையவர்களே திக்குமுக்காடிய நிலையில், ஒரே நிமிடத்தில் 6 இட்லிகளை சாப்பிட்டு அசத்திய சரோஜம்மா முதல் பரிசையும் தட்டிச்சென்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே